free website hit counter

மிஷ்கின் இயக்கிய டிரெயின் படத்தின் டீசர் வெளியீடு!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

விஜய் சேதுபதி நடிப்பில் மிஷ்கின் இயக்கியுள்ள டிரெயின் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள திரைப்படம் டிரெயின்.

த்ரில்லர் பாணியில் முழுவதும் ரயிலில் நடப்பது போல் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில், நடிகர்கள் நாசர், ஷ்ருதி ஹாசன், யுகி சேது, நரேன், கே.எஸ். ரவிக்குமார், கலையரசன் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மிஷ்கின் இசையமைத்துள்ள இப்படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரித்துள்ளார். நீண்ட நாள்களாக வெளியாகாமல் இருந்த இப்படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.

டிரெயின் திரைப்படம் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

https://youtu.be/Lx9vuPJs9Ww?si=iek8GOXz6j9UbVrX

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula