ரஜினி நடிப்பில், சிவா இயக்கத்தில் வெளியான ‘அண்ணாத்த’படத்துக்குப் பிறகு அவர் நடிக்கும் படத்தையும் சன் டிவி நிறுவனமே தயாரிக்கிறது.
இதற்காக கே.எஸ்.ரவிகுமார், வெங்கட்பிரபு, விக்னேஷ் சிவன், கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட பல்வேறு முன்னணி இயக்குநர்கள் கதைகள் கூறியுள்ளனர். ஆனால், ரஜினி தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு இயக்குநரையும் இறுதி செய்யவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பாலிவுட் இணையதளம் ஒன்று ரஜினியின் அடுத்தப் படம் குறிப்பிட்டுள்ளது. அதை நெல்சன் இயக்கவிருப்பதாவும் அந்தச் செய்தி தெரிவிக்கிறது. இதை #Thalaivar169 என்ற ஹேஷ் டேக்குடன் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பரப்பி வருகிறார்கள். இயக்குநர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ என்ற படத்தில் விஜயை இயக்கிவருகிறார். இந்தப் படத்தினை சன் டிவி நிறுவனம் தான் தயாரித்து வருகிறது. வரும் ஏப்ரல் 14-ம் தேதி இந்தப் படம் வெளியாகவுள்ளது.
இதனைத் தொடர்ந்து ரஜினி - நெல்சன் இணையும் படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கவுள்ளது. இதற்கு அனிருத் இசையமைப்பாளராக பணிபுரியவுள்ளார். ‘பீஸ்ட்’ வெளியீட்டுக்குப் பிறகு ரஜினி - நெல்சன் இணையும் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட இருப்பதாக அந்த இணைய ஊடகம் தெரிவித்துள்ளது. இந்த செய்தியை ரசிகர்கள் ரஜினி மற்றும் நெல்சன் ட்விட்டர் அக்கவுண்டுகளில் டேக் செய்துள்ளநிலையில் அவர்கள் இருவருமே இதுவரை மறுப்பு தெரிக்கவில்லை.