free website hit counter

மலையாளத்தில் சூர்யாவாக மாறிய நடிகர் நரேன்!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சூர்யா நடிப்பிலும் தயாரிப்பிலும் உருவாகி 4 மொழிகளில் ஓடிடியில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் 'ஜெய்பீம்'.

அரசியல் பிரச்சினையால் இந்தப் படத்துக்கு மேலும் வெற்றி கூடியுள்ளது. தற்போது தமிழில் கிடைத்த வெற்றிக்கு இணையாக இந்தி மற்றும் மலையாளத்தில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.மலையாளத்தில் சூர்யாவுக்கு டப்பிங் குரல் கொடுத்திருப்பவர் நடிகர் நரேன். அந்த அனுபவத்தை பற்றி நரேன் மகிழ்சியுடன் நம்மிடம் கூறும்போது: 'மிகப் பெரிய ஸ்டாரான சூர்யா சாருக்கு குரல் கொடுப்பதில் பெருமிதமடைகிறேன். பெரும் வெற்றி பெற்ற 'சூரரைப்போற்று' படத்துக்கும் நான் தான் டப்பிங் பேசினேன்.

'ஜெய்பீம்' படத்துக்கும் டப்பிங் பேச அழைத்தபோது ஒப்புக்கொண்டேன். ஆனால் நான் நினைத்த மாதிரி இல்லாமல் மிகவும் சவால் நிறைந்ததாக இருந்தது. சூர்யா சாரின் நடிப்பு, வசன உச்சரிப்பு மிக நுட்பமாக இருந்ததால் பிரேம் பை பிரேம் கவனித்து பேசியது புது அனுபவமாகவும் வித்தியாசமாகவும் இருந்தது. அதுமட்டுமல்ல, இந்த அனுபவம் சினிமாவை மேலும் கற்றுக்கொள்ள உதவியாக இருந்தது. மலையாளத்தில் படத்துக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. வாய்ப்பு அளித்த சிபு பற்றும் ஜாலி ஆகியோருக்கு நன்றி. ஜெய்பீம்!” என்றார்.

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: