free website hit counter

'ஹாரி பாட்டர்' வெப் சீரிஸில் நடிக்கவுள்ள 3 சிறுவர்கள் அறிமுகம்

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

8 பாகங்களாக வெளியான 'ஹாரி பாட்டர்' படங்கள் விரைவில் வெப் சீரிஸாக உருவாக உள்ளது. எச்பிஓ தளம் (HBO) தயாரிக்க உள்ள இந்த சீரிஸிற்கான படப்பிடிப்பு அடுத்த சில மாதங்களில் தொடங்க உள்ளது.

ஜே.கே.ரவுலிங் எழுதிய 'ஹாரி பாட்டர்' தொடர் நாவலை அடிப்படையாக கொண்டு வார்னர் ப்ரோஸ் நிறுவனம் 8 படங்களை தயாரித்து வெளியிட்டது. டேவிட்ஹேமன் தயாரித்துள்ள இந்த படங்களில் டேனியல் ராட்க்ளிப் , ரூபர்ட் கிரின்ட் மற்றும் எம்மா வாட்சன் ஆகியோர் மூன்று முன்னணி கதாபாத்திரங்களாக நடித்தனர். பேண்டசி கதைக்களத்தில் சிறுவர்களை கவரும் விதமாக உருவான இந்த படங்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

8 பாகங்களாக வெளியான 'ஹாரி பாட்டர்' படங்கள் விரைவில் வெப் சீரிஸாக உருவாக உள்ளது. எச்பிஓ தளம் (HBO) தயாரிக்க உள்ள இந்த சீரிஸிற்கான படப்பிடிப்பு அடுத்த சில மாதங்களில் தொடங்க உள்ளது. அதை தொடர்ந்து அடுத்த ஆண்டு முதல் சீசன் வெளியாகும் என கூறப்படும் நிலையில், மொத்தம் 7 சீசன்களை வெளியிட எச்பிஓ தரப்பு திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில் 'ஹாரி பாட்டர்' வெப் சீரிஸில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள 3 சிறுவர்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர். அதாவது, 30 ஆயிரம் பேருக்கும் அதிகமானோரை ஆடிஷன் செய்த பிறகு தான், இந்த 3 பேரும் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டனர். அதன்படி, எச்பிஓ நிறுவனம் தனது இன்ஸ்டாகிராமில் இதுகுறித்த பதிவை வெளியிட்டுள்ளது. அதில் ஹாரிபாட்டராக டாமினிக் மெக்லக்லின், ஹெர்மாயினியாக அரபெல்லா ஸ்டேண்டன் மற்றும் ரான் வீஸ்லியாக அலஸ்டர் ஸ்டவுட் நடிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: