சன் டிவி தயாரிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் அவரது 65 -வது படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் 8-ஆம் தேதி
ரஷ்யாவின் அருகாமையில் உள்ள ஜார்ஜியாவில் தொடங்கியது. ஆனால் அங்கு நிலவிய பருவநிலை மாற்றம் காரணமாக திட்டமிட்டப்படி பூஜா - விஜய் பங்கேற்க வேண்டிய ஒரு டூயட் பாடல் உட்பட படப்பிடிப்பை தொடர்ந்து நடத்த முடியவில்லை. இதனால் சில காட்சிகளை மட்டும் படமாக்கிகொண்டு படக்குழுவினர் சென்னை திரும்பினர். அஜித் ஆலோசகராக இருக்கும் தக்ஷா குழுவின் அதிரடி! ஆனால் மே மாதம் இரண்டாம் வாரம் முதல் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பை சென்னையில் தொடங்கத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் தமிழகத்தில் தற்போது கொரோனா இரண்டாம் அலைப் பரவல் அதிகரித்து வருவதால் அந்த திட்டத்தை கைவிட்டுள்ளனர். மேலும் தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்த பிறகு மூன்றாம் அலை தொடங்கும் முன்னதாக படப்பிடிப்பை தொடர்வது சிறந்தது என விஜய் ஆலோசனை கூறியதை சன் டிவியும் இயக்குநரும் ஏற்றுக்கொண்டனர் என விஜய் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் நாயகி பூஜா ஹெக்டே கொரோனா தொற்றிலிருந்து மீண்டுவிட்டாலும் இன்னும் உடல் உபாதைகள் இருப்பதால் 30 நாட்கள் வரை ஓய்வெடுக்க அனுமதி கேட்டுள்ளதையும் இயக்குநர் தரப்பில் கூறியுள்ளனர்.