free website hit counter

மண்வாசனைக் கலைஞன் பாரதிராஜா மண்ணுள் சங்கமமானான் !

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தமிழ்த்திரையுலகின் தவிர்க்கப்பட முடியாத பெருங்கலைஞனான பாரதிராஜா கலாமாகியதைத் தொடர்ந்து, சென்னையில்  அவருக்கு தமிழக முதல்வர் விஜய் முதலான  அரசியல் முக்கியஸ்தர்களும், திரைத்துறையினர், இரசிகர்கள் எனப் பலரும் நேரில் அஞ்சலி செலுத்திய பின்னர், அவரது புகழுடல், சொந்த ஊரான தேனி மாவட்டத்தின் வத்தலக்குண்டு பகுதியிலுள்ள அவரது பண்ணை வீட்டுக்கு நேற்று எடுத்துவரப்பட்டது. 

இன்று அவரது குடும்ப வழக்கப்படியான இறுதிச் சடங்குகள் நிறைவேற்றப்பட்டபின், காவல்துறையின் அணிவகுப்பு, மற்றும் 72 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க, பூரண அரச மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது இறுதி நிகழ்வில், சீமான், ராதிகா, பாக்யராஜ், பார்த்திபன், வடிவேலு, வைரமுத்து , உட்பட மற்றும் பல திரையுலக முக்கியஸ்தர்களும், தமிழக அரசு சார்பில் , அமைச்சர்கள் நிர்மல்குமார், வன்னியரசு, உட்பட காவல்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டு இறுதி மரியாதை செய்தனர். 

பல்லாயிரக் கணக்கான உறவுகள் கண்ணீர் மல்க, 'முதல்மரியாதை' தந்த இயக்குனர் இமயத்துக்கு இறுதி மரியாதை செய்து நிற்க, மண்ணின் கலைஞன், தான் நடந்து திரிந்த  மண்ணுள் சங்கமமாகினான்.

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: