free website hit counter

நடந்தது நயன்தாரா - விக்னேஸ் சிவன் கல்யாணம் !

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தமிழ்த்திரையுலகின் முக்கிய நட்சத்திரமான நயன்தாராவுக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் இன்று திருமணம் நடைபெற்றது. சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஷெரட்டன் க்ராண்ட் ரிசார்ட்டில் முக்கிய உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் கோலகலமாக இத் திருமணம் நடைபெற்றது.

திருமண வைபவத்தில் பல திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மணமகன் விக்னேஷ் சிவனிடம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தாலி எடுத்து கொடுக்க, மற்றுமொரு சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுகின்ற மணமகள் நயன்தாரா கழுத்தில் விக்னேஷ் சிவன் தாலிகட்டியதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை இத் திருமண வைபவத்தை பிரபலமான ஒரு ஒடிடி தளம் ஒளிபரப்பு உரிமமம் பெற்றதனால் இதனை ஒளிப்பதிவு செய்வது முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் வைபவத்தில் ஈரந்ததாகவும் கூறப்படுகிறது. இத் திருமண ஒளிப்பதிவினை ஒரு ஆவணப்பட வடிவத்தில் ஒடிடி தளம் வெளியிடவுள்ளதாகவும், அதனை இயக்குனர் கௌதம் மேனன் தொகுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது இவ்வாறிருக்க, இன்று நடைபெற்ற இத்திருமணத்தின் பொருட்டு 18 000 ஆதரவற்ற குழந்தைகளுக்கான விருந்துபசார உணவு விநியோகமும் நடைபெற்றதாகச் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula