free website hit counter

சூப்பர் ஸ்டார் ரஜினி திடீர் மயக்கமுற்றார் !

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சூப்பர் ஸ்டார் ரஜினி திடீர் மயக்கம் அடைந்ததாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அக்டோபர் 28- ஆம் தேதியான நேற்று மாலை 7 மணியளவில் ஆழ்வார்பேட்டையிலுள்ள காவேரி மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது.

இதனால் ஊடகத்தினர் மத்தியில் பரபரப்பானது. ரஜினி மகள், சௌந்தர்யா விசாகன், ரஜினியின் மைத்துநரும் லதா ரஜினிகாந்தின் அண்ணனுமான ரவி ராகவேந்தர், ரஜினியின் சகலைபாடியான ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோர் பரபரப்புடன் அடுத்தடுத்து மருத்துவமணைக்கு வந்து அடுத்து 1 மணி நேரத்தில் முகத்தில் வாட்டத்துடன் திரும்பினர். ஒய்.ஜி.மகேந்திரன் மட்டும், அவரை நெருங்கிய செய்தியாளர்களிடம் “ ரஜினி அவரது அறையில் படுத்திருப்பதைப் பார்த்தேன். அவருக்கு என்ன சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பது எனக்குத் தெரியாது” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்.

அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார் குறித்து மகிழ்ச்சியான செய்திகள் வெளியாகி வந்த நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வழக்கமான உடல் பரிசோதனைதான் என்று கூறிய பிறகுதான் ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இருப்பினும் மருத்துவமனை அறிவிப்பு வெளியிடாதவரை ரசிகர்கள் குழம்பம் தீராது எனும் நிலையில், தற்போது மருத்துவமனை அறிக்கை வெளியாகியுள்ளது.

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: