free website hit counter

ஜோதிகாவின் முடிவுகள் பற்றி மனம் திறந்த சூர்யா!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டெர்டெயிண்மெண்ட் மூலம் தரமான சிறு பட்ஜெட் படங்களை அதிகமாகத் தயாரித்து வருகிறார் நடிகர் சூர்யா.

தற்போது அவருடைய தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘உடன்பிறப்பே’  அண்ணனுக்கும் கணவனுக்கும் இடையில் மாட்டிக்கொண்ட பாசக்கார தங்கையின் தவிப்பைப் பற்றிய கதையாக உருவாகி உள்ளது. ஜோதிகா நடித்திருக்கும் 50-வது படமாக உருவாகி உள்ள இப்படத்தில் ஜோதிகாவின் கணவராக சமுத்திரக்கனியும், அண்ணனாக சசிகுமாரும் நடித்துள்ளனர்.

கத்துக்குட்டி படத்தை இயக்கிய இரா. சரவணன் இயக்கி உள்ளார். இந்தப் படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. இது பற்றி சூர்யா பேசும்போது, “1998-இல் தரமணி பிலிம் சிட்டியில் இயக்குநர் வசந்த் ஒரு பாறைக்கு அருகில் ஜோதிகாவை எனக்கு அறிமுகப்படுத்தினார். வேற ஊர், வேற மொழியைத் தாண்டி இங்கு வந்து நம்மூர் மொழியை கற்று, இந்த மக்கள் மனதுக்குள் அவர் இடம்பிடித்துள்ளார். அவர் ஏன் சில படங்கள் பண்ணினார், சில படங்கள் ஏன் பண்ணவில்லை என தெரியவில்லை. வாழ்க்கையில் அவர் எடுக்கும் முடிவுகளை ஆச்சர்யமாகப் பார்க்கிறேன். நான் ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன். நண்பனாக, கணவனாக ஜோ எனக்குக் கிடைத்ததற்கு நன்றி. ஜோதிகாவின் 50-வது படம் உடன்பிறப்பே. மொத்த படக் குழுவும் உணர்வுபூர்வமாக நடித்துள்ளனர். அழகான படம் படக்குழுவுக்கு என் வாழ்த்துகள்”என சூர்யா தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula