free website hit counter

ஜி.வி.பிரகாஷ் - கவுதம் மேனன் கூட்டணி!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

அசுரன், கர்ணன் படத்தின் வெற்றியை தொடர்ந்து, கலைப்புலி எஸ்.தாணு பெருமையுடன் வழங்கும் திரைப்படம் செல்ஃபி. இதில் நாயகனாக ஜி.வி.பிரகாஷ் நடிக்க, கதாநாயகியாக வர்ஷா பொல்லம்மா நடிக்கிறார்.

இவர்களுடன் இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த ஸ்டைலிஷ் இயக்குநரான கவுதம் வாசுதேவ் மேனன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

விஜய்யின் சாதி சான்றிதழ் ரகசியம்: எஸ்.ஏ.சந்திரசேகரன் பேச்சு!

மேலும் வாகை சந்திரசேகர், அறிமுக நாயகன்DG குணாநிதி மற்றும் தொழிலதிபர் சாம் பால் ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்தை இயக்குனர் வெற்றிமாறனின் நம்பிக்கைக்குரிய தளபதியும், உதவி இயக்குனருமான மதிமாறன் இயக்கி இருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பை எஸ்.இளையராஜா கவனிக்கிறார்.

பசுபதியின் 13 வருட காத்திருப்பு!

இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறன் வெளியிட்டு இருக்கிறார். இந்த போஸ்டர் ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத் தளத்தில் வைரலாகி வருகிறது. இப்படத்தை டிஜி பிலிம் கம்பெனி நிறுவனம் தயாரித்துள்ளது.

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: