நேபாளத்தின் மிகப் பெரிய அரசியல் கட்சியான நேபாலி காங்கிரஸ் கட்சியின் தலைவராக பிரதமர் ஷேர் பஹதுர் டெயுபாவை புதன்கிழமை மீண்டும் அக்கட்சி உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.
இந்த 14 ஆவது அரச முறைத் தேர்வின் போது டெயூபா 2733 வாக்குகளையும், எதிர்த் தரப்பைச் சேர்ந்த ஷேகர் கொயிராலா 1855 வாக்குகளையும் சுவீகரித்திருந்தனர்.
நேபாளத்தின் முன்னால் பிரதமரான கிரிஜா பிரசாத் கொயிராலாவின் உறவினரே இந்த ஷேகர் கொயிராலா ஆவார். முதற்கட்ட வாக்கெடுப்பின் போது எந்தவொரு போட்டியாளரும் 50% வீதத்துக்கு அதிகமான வாக்குகளைப் பெறாததால் வாக்கெடுப்பு மீண்டும் நடத்தப் பட்டது. இதன் போது போட்டியாளர்களான பிரகாஷ் மான் சிங் மற்றும் பிமலேந்திரா நிதி ஆகியோர் தமது ஆதரவை டெயுபாவுக்கு வழங்க முடிவு செய்ததால் அவரால் 50% வீதத்துக்கும் சற்று அதிகமான வாக்குகளை சுவீகரித்து வெற்றி பெற முடிந்தது.