free website hit counter

உலகில் தொடரும் நிலநடுக்க அழிவுகள்

உலகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்.
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் முழுவதும் 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியதில் குறைந்தது 11 பேர் பலியாகினர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர், இந்திய தலைநகர் புது தில்லி வரை நிலநடுக்கம் உணரப்பட்ட்தாக தெரிவிக்கப்படுகின்றது.

பூகம்பத்தின் மையம் ஆப்கானிஸ்தானின் ஜுர்மில் இருந்து தென்கிழக்கே 40 கிமீ (25 மைல்) தொலைவில், பாகிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தானின் எல்லைகளுக்கு அருகில் இருப்பதாக அமெரிக்க புவியியல் ஆய்வு (யுஎஸ்ஜிஎஸ்) செவ்வாயன்று தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் வானிலை ஆய்வு மையத்தில் 6.8 ரிக்டர் அளவிலும் , பின்னர் ஆப்கானிஸ்தானுடனான நாட்டின் எல்லையில் உள்ள இந்து குஷ் பகுதியில் 3.7 அளவிலும் அதிர்வு பதியப்பட்டுள்ளது.

நாட்டின் வடமேற்கில் உள்ள பாகிஸ்தானின் மீட்பு 1122 சேவையின் செய்தித் தொடர்பாளர் பிலால் ஃபைசி மற்றும் பிற அதிகாரிகள் அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்திடம், வடமேற்கு பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் கூரைகள் இடிந்து விழுந்ததில் ஒன்பது பேர் கொல்லப்பட்டதாக தெரிவித்தனர்.
4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: