free website hit counter

உலகின் 50 சிறந்த ஹோட்டல்களின் பட்டியலில் இடம்பிடித்த இலங்கை ஹோட்டல்

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
2023 ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த 50 ஹோட்டல்களில் இலங்கையின் அமங்கல்ல இடம் பெற்றுள்ளது.
2023 ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த 50 ஹோட்டல்களில் காலியில் அமைந்துள்ள அமங்கல்ல எனும் சொகுசு ஹோட்டல் இடம்பெற்றுள்ளது.

World’s 50 best stories என்ற இணையதளத்திற்கமைய, அமங்கல்ல ஹோட்டல் 38வது இடத்தைப் பிடித்துள்ளது.

17 ஆம் நூற்றாண்டின் யுனெஸ்கோவால் பட்டியலிடப்பட்ட காலி கோட்டை அரண்மனைக்குள் அமைந்திக்கும் அமங்கல்ல 300 ஆண்டுகால விருந்தோம்பல் வரலாற்றைக் கொண்டுள்ளது.

அமங்கல்ல ஹோட்டல் காலி ஒருபுறம் காலி கோட்டை மற்றும் துறைமுகத்தின் காட்சிகளை வழங்குகிறது.

மறுபுறம் ஹோட்டலின் பசுமையான தோட்டங்கள் மற்றும் நீச்சல் குளம், வரலாற்று சிறப்புமிக்க குடியிருப்பு உயர்ந்த அறைகள், நேர்த்தியான உணவு மற்றும் The Baths எனப்படும் அமைதியான ஸ்பா வளாகத்தை வழங்குகிறது.

அமங்கல்ல கொழும்பிலிருந்து ஒரு மணித்தியாலம் 30 நிமிட பயண தூரத்தில் அமைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அத்தோடு, இத்தாலியில் உள்ள அழகிய லேக் கோமோவில் உள்ள 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த குடும்பத்திற்குச் சொந்தமான 24 அறைகளைக் கொண்ட பசலாக்வ என்ற வில்லா உலகின் சிறந்த ஹோட்டலாகப் பெயரிடப்பட்டுள்ளது.
4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: