VAT வரியை 15 வீதத்தில் இருந்து 18 வீதமாக அதிகரிப்பதன் மூலம் ரூ.227 பில்லியன் அரச வருமானம் கிடைக்கும் என அரசு எதிர்பார்ப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
138 பொருட்களுக்கு VAT இல் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் 97 பொருட்கள் புதிய திருத்தத்தின் கீழ் VATக்கு உட்படுத்தப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
பெட்ரோல் மற்றும் டீசல் இரண்டிற்கும் VAT விதிக்கப்படும் என்றும், காய்கறிகள், பழங்கள், அரிசி மாவு மற்றும் மருந்து போன்ற சில பொருட்களுக்கு VAT விலக்கு தொடரும் என்றும் அவர் கூறினார்.