நாட்டில் தற்போதுள்ள எரிபொருள் இருப்புக்களை நிர்வகிப்பதற்காக எரிசக்தி அமைச்சு கடந்த சில நாட்களுக்கு முன்னர் எரிபொருள் விநியோகத்திற்கு வரம்புகளை விதித்திருந்தது.
“இலங்கை மத்திய வங்கி இரண்டு கப்பல்களுக்கு பணம் செலுத்த ஒப்புக்கொண்டுள்ளது. இதன்மூலம், 16ம் திகதிக்கு பின் வர வேண்டிய கப்பல்கள், ஜூன், 09 மற்றும் 10ம் திகதிகளில் வந்து சேரும் என, எதிர்பார்க்கப்படுகிறது,'' என்றார்.
வழக்கமாக ஒரு நாளைக்கு 5400 மெட்ரிக் டன் டீசல் மற்றும் 3400 மெட்ரிக் டன் பெட்ரோல் தேவைப்படும் ஆனால் தற்போது 3200 மெட்ரிக் டன் டீசல் மற்றும் 2,800 மெட்ரிக் டன் பெட்ரோலை மட்டுமே வெளியிடுகிறோம்.
நாளை முதல் தினசரி 5,000 மெட்ரிக் டன் டீசல் மற்றும் 3,500 பெற்றோல் சந்தைக்கு வெளியிடப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
குறிப்பாக இலங்கை போக்குவரத்து சபை (SLTB) மற்றும் தனியார் பஸ் டிப்போக்கள் மற்றும் பாடசாலை போக்குவரத்து பஸ்களுக்கு வழங்கப்படும் எரிபொருளுடன் பொது போக்குவரத்து துறைக்கும் எரிபொருளை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படுமெனவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
சுற்றுலா மற்றும் மீன்பிடி துறைகளுக்கு எரிபொருளை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.