free website hit counter

நாடாளுமன்ற ஆவணங்களை காகிதமற்றவைகளாக மாற்ற முடிவு

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
வருடாந்த அறிக்கைகள் உட்பட அனைத்து அறிக்கைகளையும் மென் பிரதிகளாக மின்னஞ்சல் ஊடாக சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக பாராளுமன்ற செலவுகளை குறைப்பதற்கும், சுற்றுசூழல் பாதிப்பை குறைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காகிதம் மற்றும் அச்சிடுவதற்கு தேவையான பொருட்கள் பற்றாக்குறையும் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.

எனவே, தேவையான அறிக்கைகள் மற்றும் பாராளுமன்றம் தொடர்பான ஏனைய ஆவணங்களை மென் பிரதிகளாக அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் மின்னஞ்சல் மூலம் அனுப்புவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக நாடாளுமன்றத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஒரு சிறப்பு தளத்தை சேர்க்க நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு முடிவு செய்துள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula