free website hit counter

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்யுமாறு உத்தரவு!

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் சற்றுமுன்னர் பிடியாணை பிறப்பித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவை கைது செய்வதற்காக திறந்த பிடியாணையை பிறப்பிக்குமாறு கோரி சட்டமா அதிபர் திணைக்களம், கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்வைத்த கோரிக்கமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தன்னை கைது செய்வதை தடுக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ரிட் மனுவை இன்று காலை தாக்கல் செய்திருந்தார்.

மே 9 ஆம் திகதி கொழும்பில் பதிவாகியிருந்த அமைதியின்மை தொடர்பான வழக்கின் சந்தேக நபராக நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பெயரிடப்பட்டுள்ளார்.

இதனை அடுத்து குற்றப் புலனாய்வு பிரிவினர் கடந்த ஒரு வாரமாக அவரை வலைவீசி தேடிவருகின்ற போதும் அவர் இதுவரை கைது செய்யப்படவில்லை.

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சார்பில் சட்டத்தரணிகளால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: