free website hit counter

சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் பணிகள் மீள ஆரம்பம்

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் பணிகள் மீள ஆரம்பிக்கப்பட உள்ளதாக இலங்கை மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.
அடுத்த வாரமளவில் மீளவும் சாரதி அனுமதிப்பத்திரங்கள் அச்சிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலப்பொருள் பற்றாக்குறை காரணமாக சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சாரதி அனுமதிப் பத்திரங்களுக்கு தேவையான 500,000 அட்டைகள் ஜெர்மனியிலிருந்து தருவிக்கப்பட உள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

சுமார் 600,000 சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிட்டு விநியோகம் செய்ய வேண்டியிருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ள காத்திருப்போர் தற்பொழுது தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்களை பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula