இலங்கையில் டெல்டா பிறழ்வு காரணமாக தொற்றாளர்களின் எண்ணிக்கை அடுத்துவரும் இரு வாரங்களுக்கு அதிகரிக்கும் அபாயம் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கொழும்பு மாவட்டத்தில் டெல்டா பிறழ்வு வேகமாக பரவுவதாக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் கொழும்பில் 19.3 வீதமானவர்கள் டெல்டா பிறழ்வு தொற்றாளர்களாக கடந்த ஜூலை மாதத்தில் பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை கொழும்பை அண்மித்த 15 இடங்களில் டெல்டா பிறழ்வு பரவிவருவதாகவும் அதைதவிர காலி, மாத்தறை, இரத்தினபுரி, குருநாகல், அம்பாறை, வவுனியா, மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களிலும் தொற்றாளர்கள் இனம்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் மக்கள் வெளியே வருமாரும்; முறையான முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளிகள் உள்ளிட்ட சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதோடு அடுத்துவரும் இருவாரங்களில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கும் அபாயம் இருப்பதாகவும் பொதுமக்கள் இதனை கருத்தில்கொண்டு பொறுப்புடன் செயல்படுமாறும் இராணுவத்தளபதியால் தெரிவிக்கப்பட்டுள்ளது.