free website hit counter

இலங்கையில் எதிர்வரும் 19ஆம் திகதி விசேட அரசாங்க விடுமுறை

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
இலங்கையில் எதிர்வரும் 19ஆம் திகதி விசேட அரசாங்க விடுமுறை.
செப்டம்பர் 19 ஆம் திகதி திங்கட்கிழமை அரச நிறுவனங்களுக்கு விசேட விடுமுறை தினமாக பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கைக் குறிக்கும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அரசாங்கத்தின் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கு அரசாங்க விடுமுறை தினம் தடையாக இருக்கமாட்டாது என பொதுநிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் விடுத்துள்ள அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அன்றைய தினம் தேசிய துக்க தினமாக கடந்த வாரம் அரசாங்கம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அனைத்து அரச கட்டடங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.
4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: