இலங்கையில் பெண்கள் அதிகளவில் புற்றுநோயாளர்களாக இனங்கானப்படுகின்றார்கள்.
இலங்கையில் புற்று நோய் அதிகரித்து வருவது தொடர்பில் அவரிடம் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையில் பெண்கள் அதிகளவில் புற்றுநோயாளர்களாக இனங்கானப்படுகின்றார்கள்.
அண்மையில் ஆண்களுக்கும் இந்த பாதிப்பு இனங்காணப்பட்டுள்ளது. புகைத்தல், மதுபானம் அருந்துதல், கிருமி நாசினி உணவுகளை உண்ணுதல் மற்றும் உடற்பயிற்சியின்மை உறைப்பான உணவுகளை உண்ணுதல் போன்றவற்றினால் புற்றுநோய் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.
ஆண்களுக்கு ஏற்படும் புற்று நோயானது வாய் மற்றும் தொண்டைப் பகுதிகளில் ஏற்படுவதுடன் பெண்களுக்கு பெரும்பாலும் மார்பகம் மற்றும் கர்ப்பப்பையில் ஏற்படுகின்றது.
அதுமட்டுமல்லாது பெண்களுக்கு மாதவிடாய் நின்ற நிலையில் ஏற்படும் தொடர்ச்சியான இரத்தப்போக்கு புற்றுநோய் அறிகுறிகளாக கொள்ளப்படுகிறது.
மனித உடலில் புற்றுநோயானது ஏற்பட்டுள்ளது என்பதை அறிவது மிகவும் கடினமாக இருக்கின்ற நிலையில் நீண்ட நாள் இருமல் வாய்ப்புண், மலம் கழித்தலில் சிரமம் மற்றும் உடலின் வெளிப் பகுதிகளில் ஏற்படும் கட்டிகள் போன்றன புற்று நோய்களுக்கான அறிகுறிகளாகும்.
இவ்வாறான அறிகுறிகள் ஏற்படும்போது வைத்தியரை அணுகினால் நவீன சிகிச்சை முறைகள் மூலம் நோயை அறிவதற்கான வசதிகள் வைத்தியசாலைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
புற்றுநோயை ஆரம்பத்தில் கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் அதனை குணமாக்குவதற்கு வழிமுறைகள் உள்ளதுடன் நோய்க்கிருமிகள் உடலின் ஏனைய பகுதிகளுக்கு பரவாமல் கட்டுப்படுத்துவதற்கான கதிர்வீச்சு சிகிச்சைகளும் உள்ளது.
நெருக்கடி காரணமாக புற்றுநோய் சிகிச்சைக்காக வழங்கப்படும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகின்ற நிலையில் முக்கியத்துவம் வாய்ந்த மருந்துகள் மட்டும் பெற்றுக் கொள்ளப்படுகின்றது.
ஆகவே இலங்கையில் புற்றுநோயின் தாக்கம் தற்போது சற்று அதிகமாக உணரப்படுகின்ற நிலையில் நோய் தொடர்பில் விழிப்பாகவும் நோய் ஏற்பட்ட பின்னர் உரிய நேரத்தில் வைத்தியரை அணுகுவதன் மூலம் புற்று நோயை கட்டுப்படுத்திக் கொள்ள முடியும்” என தெரிவித்துள்ளார்.