2023 ஆம் ஆண்டுக்கான பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கு 16,483 மில்லியன் ரூபா தேவைப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
பாடசாலை பாடப் புத்தகங்களை அச்சிடுவதற்கும், பரீட்சை வினாத்தாள்களை அச்சிடுவதற்கும், விடை எழுதுவதற்கு தேவையான காகிதாதிகள் மற்றும் எழுதுகருவிகள் இந்திய கடன் உதவியின் கீழ் இறக்குமதி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சின் கீழ் உள்ள அரச அச்சக கூட்டுத்தாபனத்தினால் மொத்த பாடப்புத்தகங்களில் 45 வீதத்தை அச்சிடுவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.