free website hit counter

ஜூன் மாதத்துக்கான ஐசிசியின் சிறந்த வீரராக வனிந்து ஹசரங்க

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
ஜூன் மாதத்திற்கான சிறந்த வீரராக இலங்கையின் வனிந்து ஹசரங்காவும், சிறந்த வீராங்கனையாக ஆஷ் கார்ட்னர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. இந்நிலையில் ஜூன் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐசிசி அறிவித்தது.

அதன்படி ஜூன் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட், இலங்கையின் வனிந்து ஹசரங்கா, ஜிம்பாப்வேயின் சீன் வில்லியம்ஸ் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டது.

அதேபோல் ஜூன் மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருதுக்கு இங்கிலாந்தின் டாமி பியூமண்ட், ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே கார்ட்னர், வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஹேலி மேத்யூஸ் பெயரும் பரிந்துரை செய்யப்பட்டது.

இவர்களில் அதிக வாக்குகள் பெறும் வீரர் மற்றும் வீராங்கனைக்கு ஜூன் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி ஜூன் மாதத்திற்கான சிறந்த வீரராக இலங்கையின் வனிந்து ஹசரங்காவும், சிறந்த வீராங்கனையாக ஆஷ் கார்ட்னர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சிம்பாப்வேயில் நடைபெற்ற ஐசிசி உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளில் சிறப்பாக செயற்பட்ட நிலையில் அவருக்கு இவ்விருது கிடைத்துள்ளது.

கடந்த ஜூன் மாதத்தில் 26 விக்கெட்களை வனிந்து ஹசரங்க வீழ்த்தினார். தொடர்ச்சியாக 3 போட்டிகளில் 5 விக்கெட் குவியலையும் அவர் பதிவு செய்தார். இதற்கு முன் வக்கார் யூனிஸ் மாத்திரமே 1990 ஆம் ஆண்டில் இச்சாதனையை நிகழ்த்தியிருந்தார்.
4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: