அமெரிக்க ஓபன் டென்னிஸ் - சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்
ஆரம்பம் முதலே ஜோகோவிச் அதிரடியாக ஆடினார். முதல் செட்டை 6-3 என ஜோகோவிச் எளிதில் கைப்பற்றினார். இரண்டாவது செட்டில் மெத்வதேவ் பதிலடி கொடுக்கும் விதமாக ஆடினார்.
இதனால் ஜோகோவிச் 7-6 (7-5) என போராடி கைப்பற்றினார். மூன்றாவது செட்டை ஜோகோவிச் 6-3 என வென்றார்.
இறுதியில், ஜோகோவிச் 6-3, 7-6 (7-5), 6-3 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். இது ஜோகோவிச்சின் 24வது கிராண்ட்சிலாம் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.