free website hit counter

டோக்கியோ ஒலிம்பிக்கில் 2 தங்கம் வென்ற ரஷிய நீச்சல் வீரருக்கு சர்வதேச போட்டிகளில் பங்கேற்க தடை

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
ரஷிய நீச்சல் வீரர் எவ்கெனி ரைலோவுக்கு சர்வதேச போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷியா போர் 56-வது நாளாக தொடரும் நிலையில் ஏற்கெனவே ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யவும் பிரிட்டன், ஐரோப்பிய நாடுகள் தடை விதித்துள்ளன. 

அதுமட்டுமின்றி லண்டனில் நடக்கும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க  ரஷியா, பெலாரஸ் நாட்டு வீரர்களுக்கு நேற்று முன்தினம் தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது ரஷியாவை சேர்ந்த நீச்சல் வீரர் எவ்கெனி ரைலோவுக்கு சர்வதேச நீச்சல் போட்டிகளில் பங்கேற்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 2 தங்கம் வென்ற இவர் உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பிற்கு ஆதரவு தெரிவித்து பேரணி ஒன்றில் சமீபத்தில் பங்கேற்றார்.

இதையடுத்து வரை 9 மாதங்களுக்கு தடை விதித்து FINA எனப்படும் சர்வதேச நீச்சல் சங்கம் உத்தரவிட்டுள்ளது. மாஸ்கோவில் நடைபெற்ற பேரணியில் ரைலோவ் பிற பதக்கங்கள் வென்ற வீரர்களுடன் மேடையில் ‘Z’ என்ற எழுத்தை கொண்ட ஆடையை அணிந்திருந்தார்.  இது ரஷிய படைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் எழுத்து என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய பினா அமைப்பு, ரைலோவை தொடர்ந்து பிற ரஷிய மற்றும் பெலாரஸ் வீரர்களை அனைத்து சர்வதேச போட்டிகளில் இருந்து தடை செய்யவுள்ளோம். தற்போது ரஷியா மற்றும் பெலாரஸ் ஆகியவை ஹங்கேரியில் நடைபெறவுள்ள சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து தடைவிதிக்கப்பட்டுள்ளன. மேலும் எந்த ஒரு நிகழ்வுகளுக்கும் இரு நாடுகளை சேர்ந்த வீரர்கள் அழைக்கப்பட மாட்டார்கள் என கூறியுள்ளது.
4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: