குறைந்த போட்டியில் 10 ஆயிரம் ரன்கள்- சச்சின் சாதனையை முறியடித்த ரோகித் சர்மா
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் - சுப்மன் கில் களமிறங்கினர். ரோகித் முதல் ஓவரில் 1 பவுண்டரி உள்பட 5 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து விளையாடிய ரோகித் 22 ரன்கள் எடுத்த போது ஒருநாள் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் குவித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.
மேலும் குறைந்த போட்டியில் 10 ஆயிரம் ரன்கள் குவித்த சச்சின் சாதனையை அவர் முறியடித்துள்ளார். ரோகித் 241 போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை கடந்தார். சச்சின் 259 போட்டிகளில் இதனை கடந்தார். இந்த பட்டியலில் முதல் இடத்தில் விராட் கோலி உள்ளார்.
இவர் 205 போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை கடந்தார். இந்திய வீரர்களில் 10 ஆயிரம் ரன்களை கடந்த 6-வது வீரராக ரோகித் உள்ளார்.
முதல் 5 இடங்களில் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, கங்குலி, டிராவிட், டோனி ஆகியோர் உள்ளனர்.