free website hit counter

உலக டேபிள் டென்னிஸ் - பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சுதிர்தா - அய்ஹிகா ஜோடி சாம்பியன்

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
இந்தியாவின் சுதிர்தா முகர்ஜி - அய்ஹிகா முகர்ஜி ஜோடி ஜப்பானின் மியு கிஹாரா - மிவா ஹரிமோட்டா ஜோடியுடன் மோதியது.
உலக டேபிள் டென்னிஸ் 'கன்டென்டர் துனிஷ் 2023' சாம்பியன்ஷிப் போட்டி துனிசியாவில் நடந்து வந்தது. இதில் நேற்று நடந்த பெண்கள் இரட்டையர் பிரிவின் இறுதி போட்டியில் இந்தியாவின் சுதிர்தா முகர்ஜி - அய்ஹிகா முகர்ஜி ஜோடி ஜப்பானின் மியு கிஹாரா - மிவா ஹரிமோட்டா ஜோடியுடன் மோதியது.

இந்த போட்டியில் சுதிர்தா - அய்ஹிகா ஜோடி 11-5, 11-6, 5-11, 13-11 என்ற செட் கணக்கில் மியு கிஹாரா - மிவா ஹரிமோட்டா ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.

இந்த வெற்றியின் மூலம் உலக டேபிள் டென்னிஸ் கன்டென்டர் சாம்பியன்ஷிப்பை வென்ற முதல் இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனைகள் என்ற பெருமையை சுதிர்தா, அய்ஹிகா ஜோடி பெற்றது.
4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: