போலந்து நாட்டின் அங்காடி கடை அலமாரிகளில் கெதியில் கலாவதியாகும் உணவுப்பொருட்கள் வாங்கப்படாமல் இருந்தால் அதன் விலைகள் தானாக குறைக்கப்படுகிறது.
இது பொருட்கள் அடுக்கிக்வைக்கப்பட்டிருக்கும் அலமாரிகளில் பொருத்தபட்டிருக்கும் புதிய மென்பொருள் உதவியுடன் விலைப்பட்டியலில் தானாகவே நிகழ்கிறது. இத்திட்டமானது 40% உணவு வீணாகுவது தவிர்ப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவில் மட்டும், 30 முதல் 40 சதவிகித உணவு வீணாக்கப்படுவதாக வேளாண்மைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது சுற்றுச்சூழல் மட்டுமல்லாது பொருளாதார பிரச்சினையையும் உருவாக்கிவருகிறது. மேலும் உணவு கழிவுகள் பசுமை இல்ல வாயு உமிழ்வுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.
https://www.engadget.com/wasteless-metro-partnership-193233098.html