உலகப் பெருதொற்றிலிருந்து வெளிவரும் பல்வேறு செய்திகள் உலக மக்களை பெரும் கவலைக்குள்ளாக்கி உள்ளது. ஒவ்வொரு நாளையும் எதிர்கொள்வது பெரிய சவாலாகவும் தென்படத்தொடங்கியதுள்ளது. அதிலிருந்து கடந்துவந்தவர்களுக்காகவும், கடந்து வருபவற்காகவும், நாளும் ஒரு நல்ல செய்தி.
பிரபஞ்சத்தில் இன்றுவரை நற்செயல்களும் நல்ல பல சம்பவங்களும் நிகழ்ந்த வண்ணமேயுள்ளன. ஆனால் நாம் அவற்றை தேடி அறிந்துகொள்ளும் ஆர்வத்தை கூட ஏற்படுத்துவதில்லை. அதற்கான வாய்ப்புகளும் குறைந்திருப்பதும் ஒரு காரணமாகிறது. வாழ்க்கையின் நேர்மறையான பக்கத்தைப் பார்ப்பதில் நம்பிக்கை கொண்டு உங்களையும் அந்த இன்ப பக்கங்களை பார்க்கவைப்பதற்கான வழிவகையே இந்தப் புதிய பகுதியின் நோக்கம்.
இதில் உலகம் முழுவதிலுல் நடந்து வரும் மிகச்சிறிய செய்தியானாலும் நம்பிக்கையூட்டும் மற்றும் எழுச்சியூட்டும் செய்திகளை மட்டும் தொகுத்துத் தருகின்றோம்.
- 4TamilmediaTeam
காலநிலை மாற்றத்தை சமாளிக்க ஸ்காட்லாந்தின் புதிய நகர்புற 'காடு"
அடுத்த தசாப்தத்தில், ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் தலா 10 மரங்கள் நடுவது அவசியாமாக்கப்பட்டுள்ளது. இந்த நகர்புற காடு காலநிலை மாற்றத்தை சமாளிக்க உதவும்.
கிளாஸ்கோவிலும் அதைச் சுற்றியுள்ள பிரதேசங்களில் புதிய நகர்ப்புற காடுகள்" எனும் அடிப்படையில் அடுத்த தசாப்தத்திற்குள் 18 மில்லியன் மரங்களை நடவு செய்யப்படவுள்ளன. இது நெட் ஜீரோவை அடைவதற்கான நகர பிராந்தியத்தின் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக கிளைட் காலநிலை வனப்பகுதியில் ஒரு குடியிருப்பாளருக்கு 10 மரங்கள் இருக்கும், அதே நேரத்தில் இப்பகுதியில் வனப்பகுதிகளை 17% முதல் 20% வரை உயர்த்தும்.
தொற்றுநோய் காரணமாக உடற்பயிற்சி, மன அழுத்தங்களை குறைப்பதற்கு இந்த செயற்பாடு இயற்கையுடன் கவனத்தை செலுத்த உதவும்.
https://www.expressandstar.com/news/viral-news/2021/06/01/18-million-trees-to-be-planted-as-part-of-new-climate-forest/