லண்டன் சதுப்புநில மையம் மனச்சோர்வு மற்றும் பதட்டத்தைத் தணிக்க உதவும் சிகிச்சையாக இயற்கை அழகை மையமாகக் கொண்ட படிப்புகளை நடத்துகிறது.சமீபகாலமாக பெருந்தொகையான மக்களின் மன ஆரோக்கியம் பாதிப்படைந்து வருகிறது.
இந்நிலையில் இவ்வாறு மன ஆரோக்கியம் பாதிப்படைந்தோர்களுக்காக இங்கிலாந்தில் உள்ள சதுப்பு நிலப்பிரதேசங்களில் பறவைக் கண்காணிப்பு, குளம் நீராடுவது, கால்நடைகள் மற்றும் வாழ்விடப் பாதுகாப்பு போன்ற இயற்கைசார் பணிகள் குறித்த புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தின் சதுப்பு நிலங்களை பாதுகாக்கும் WWT லண்டன் வெட்லேண்ட் மையம் மற்றும் மனநல அறக்கட்டளையின் பங்கேற்பாளர்களால் இணைந்து இப் புதிய பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆறுவார கால படிப்பாக தொடங்கவுள்ள இத்திட்டத்தில் பங்கேற்பாளர்களின் பயணச் செலவுகள் நன்கொடை மூலம் பெறப்படவுள்ளது. நிலையான மருத்துவ கேள்வித்தாள்களைப் பயன்படுத்தி இப்பாடத்தினால் ஏற்படும் முன்னேற்றங்களும் மதிப்பிடப்படுகிறது.
தன்னார்வ வனவிலங்கு கண்காணிப்பு போன்ற நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட முந்தைய திட்டங்கள் மன ஆரோக்கியத்தில் தெளிவான முன்னேற்றங்களை சந்தித்திருந்தன. ஏரிகள், ஆறுகள் மற்றும் கடலுக்கு அருகில் இருப்பது - தோட்டங்கள், பூங்காக்கள் மற்றும் கிராமப்புறங்களில் செலவழிக்கும் நேரங்கள் மக்களின் மன ஆரோக்கியத்தில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்துவது குறித்து மக்களாலேயே மதிப்பீடப்பட்டிருந்தது குறிப்பிடதக்கது.