கடந்தாண்டு வழக்கத்தை விட பருவமழை காரணமாக இந்தோனேசியாவின் சுற்றுலாத் தலமாக திகழ்ந்த பாலி மற்றும் குதா போன்ற கடற்கரைகள் பிளாஸ்டிக் போத்தல்கள், நெகிழிப் பைகள் மற்றும் பிற குப்பைகளால் மூழ்கியது.
இதனால் ஏற்படக் கூடிய சுற்றுச் சூழல் மாசினை உணர்ந்து, ஒற்றிணைந்து செயற்பட்ட அந்நாட்டு மக்கள் 2021ஆம் ஆண்டின் முதல் வாரத்திலே இவ்வாறு 4 கடற்கரைகளில் சேர்ந்திருந்த 110 தொன் பிளாஸ்டிக் நெகிழிக் குப்பைகளை அப்புறப்படுத்தியுள்ளனர்.
கடந்த ஜனவரி மாதத்திற்குள் மூன்று கடற்கரை பிரதேசங்களில் 3.80 டொன் கழிவுகளை அப்பிரதேச உறுப்பினர்கள் உதவியுடன் அப்புறப்படுத்தி சுத்தப்படுத்தியுள்ளனர். இதில் சுமார் 600 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றிருந்தனர்.
சுற்றுலாத்தளமாக திகழ்ந்துவரும் பாலி கடற்கரை தற்போது தூய்மைபெற்று வருகிறது.