உலகில் கிட்டத்தட்ட 38 மில்லியன் மக்கள் எய்ட்ஸ் எனும் எச்.ஐ.வி பெரு நோய்க்கு நோய்க்கு ஆட்பட்டுள்ள நிலையில் அந்நோயிற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் சிரமம் இருந்துவந்தது.
இது மருத்து உலகிற்குக் பெரும் சவாலாகவும் இருங்தது. இந்நிலையில் எச்.ஐ.வி நோய்தடுப்பிற்காக ஒரு புதிய தடுப்பூசி அணுகுமுறையில் முதலாம் கட்ட பரிசோதனைகளில் வெற்றி அடைந்துள்ளது என்று ஐ.ஏ.வி மற்றும் ஸ்கிரிப்ஸ் ரிசர்ச் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சோதனையின் போது இத் தடுப்பூசி எச்.ஐ.விக்கு எதிரான ஆன்டிபாடிகளை உருவாக்க தேவையான அரிய நோயெதிர்ப்பு உயிரணுக்களின் உற்பத்தியை 97 சதவீதம் வெற்றிகரமாக தூண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இன்ஃப்ளூயன்ஸா, டெங்கு, ஜிகா, ஹெபடைடிஸ் சி மற்றும் மலேரியா போன்ற சவாலான நோய்க்கிருமிகளுக்கான தடுப்பூசிகளுக்கும் இந்த ஆய்வும், அதன் முடிவுகளும் புதிய அணுகுமுறை பயன்படுத்தப்படுத்தத் தூண்டலாம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
இதனால் எச்.ஐ.வி நோய்க்கு எதிராக பாதுகாப்பான தடுப்பூசி மருந்துகளின் அடுத்தகட்ட பரிசோதனைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகப் பெருநோய் ஒன்றின் நிவாரணியாக வரவிருக்கும் அந்த தடுப்பு மருந்திற்காகக் காத்திருக்கிறது மருத்துவமும் , மானுடமும்...
மேலும் பல நல்ல செய்திகள் காண இங்கே அழுத்துங்கள்.