சீனாவில் அழிந்துவரும் நிலையில் இருந்த பாண்டா கரடிகள் அதிலிருந்து மீட்கப்பட்டு வருகிறது. இதனால் அழிந்துபோகும் அபாயத்தில் உள்ள உலகளாவிய உயிரினங்களின் பட்டியலில் இருந்து பண்டாக்கள் விலக்கப்பட்டுள்ளன.
அழிவின் விளிம்பு நிலையில் இருந்த பாண்டா கரடிகள் தற்போது பெரிய அளவில் மீட்கப்படும் நல்ல செய்தியினை பாண்டா கரடிகளை பாதுகாத்து பராமரித்து வரும் WWF அமைப்பால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1980 களில், சீனாவில் 1,114 பாண்டாக்கள் இருந்தன. மிகச் சமீபத்திய கணக்கெடுப்பில் 1,864 பாண்டாக்கள் வனப்பகுதிகளில் வாழ்கின்றன என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
30 வருட மெதுவான ஆனால் நிலையான முன்னேற்றத்திற்குப் பிறகு, ஐ.யூ.சி.என் இப்போது அழிந்துபோகும் அபாயத்தில் உள்ள உலகளாவிய உயிரினங்களின் சிவப்பு பட்டியலில் பாண்டாவின் நிலையை மாற்றியுள்ளது. இந்த முடிவு பல ஆண்டுகளாக சீன அரசு, உள்ளூர் சமூகங்கள், இயற்கை பணி ஊழியர்கள் மற்றும் WWF ஆகியோரின் கடின உழைப்பை அங்கீகரிப்பதாகும். பாண்டாக்கள் மீட்புக்கான பாதையில் உள்ளது எனில் ஐம்பது ஆண்டுகளாக உலகின் புகழ்பெற்ற கரடிகளையும் அவற்றின் தனித்துவமான வாழ்விடத்தையும் காப்பாற்றுவதற்கான முயற்சிகளில் WWF 1981 முதல் அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட்டு வருவதே ஆகும்.
மேலும் பாண்டா இருப்பு நிலங்களின் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது. அவை இப்போது கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு காட்டு பாண்டாக்களையும், மலை மூங்கில் காடுகளின் பெரிய இடங்களையும் பாதுகாக்கின்றன. இந்த இருப்பு நிலங்கள் எண்ணற்ற பிற உயிரினங்களுக்கு அடைக்கலம் தருகின்றன