இறைவனால் ஆசீவதிக்கப்பட்ட அழகு பூமி எனக் கொண்டாட்டப்படும், நோர்வே நாட்டின் கடந்த தசாப்த கார் விற்பனை சந்தையில் எரிபொருள் கார்களின் விற்பனை வெறும் 1 வீகிதமாக பதிவானது.
இந்த நன்மைக்குரிய மாற்றம் சூழலின் வாகன எரிவாயு பாதிப்பை குறைப்பதனை நோக்கமாகக் கொண்டு நிகழ்ந்திருக்கிறது. பல ஆண்டுகளாக நோர்வே மின்சார வாகன தத்தெடுப்பில் முன்னணியில் உள்ளதுடன் 2025 ஆம் ஆண்டுக்குள் விற்கப்படவுள்ள அனைத்து கார்களும் மின்சார கார்களாக மாற்றவுள்ளது.
சூழலுக்கு பாதகம் விளைவிக்கும் எரிபொருள் அதாவது பெற்றோல் மற்றும் டீசலில் இயங்கும் கார்களின் விற்பனையை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் எரிபொருள் கார்களுக்கு விற்பனை வரி அதிகரிக்கப்பட்டும்; அதேநேரம் மின்சாரத்தால் இயங்கும் கார்களுக்கு விற்பனை வரி விலக்கும் அளித்துள்ளது. அதாவது மின்சார கார்களுக்கு விற்பனை வரி இல்லை அத்தோடு குறைவான வீதி கட்டணங்கள், வீதி வரி இல்லை மற்றும் இலவச வாகன நிறுத்தும் இடம் போன்றவை ஏற்கனவே நோர்வே நாட்டில் பொது திட்டங்களாக இருந்துவருகிறது.
இந்தத்திட்டங்கள் அந்நாட்டின் கார் உற்பத்தியிலும் விற்பனையிலும் மாற்றத்தை நிகழ்த்தியது. அதிகளவான மின்சார கார்கள் விற்பனையாகத்தொடங்கின, இதனால் கடந்தாண்டு நோர்வே நாட்டின் புதிய கார் விற்பனை சந்தையில் 54 வீதம் மின்சார கார்கள் விற்பனையானதோடு இவ்வாண்டு பிப்ரவரியில் 79.1% மாக அதிகரித்தது. எரிபொருள் கார் விற்பனை பெரும் சரிவை அடைந்தது.
நாம் நினைப்பதைவிட உலகின் பிற நாடுகளும் வேகமாக இதனை பின்பற்றத்தொடங்கலாம், தொடங்கியுமுள்ளன...
தினமும் உலகைப் புதிதாய் காணும் வகையில் நாளும் வெளிவரும் நல்ல பல செய்திகளைக்காண இங்கே அழுத்துக