திருமால் எடுத்த தசாவதாரங்களில் மூன்றாவது அவதாரம் வராஹ அவதாரம். இன்று (சித்திரை ரேவதி) வராஹ ஜெயந்தி திருநாள்.
புராண வரலாறுகளின் படி உலகத்தை ஹிரண்யாக்ஷன் என்ற அசுரன் கவர்ந்து சென்றானாம். அப்படி அரக்கனால் கவரப்பட்ட பூமியை காக்க, பெருமாள் வெள்ளை வராக (பன்றி) உருவெடுத்து அசுரனை அழித்து பூமியை தன் மூக்கில் தாங்கினாராம்.
வராக சிற்பங்களில் ஆயிரமாண்டுகளுக்கு முன்பே கோள வடிவ உலகம் செதுக்கப்பட்டிருப்பது இந்திய ஞான மரபில் உலகம் கோள வடிவினது அறிவு இருந்தமையையே காட்டுகிறது.
இன்று உலகமே பெருந்தொற்றால் ஆடிப் போயிருக்கிறது. இந்த உலகத்துக்குள் ஏற்பட்டுள்ள இடர்களை அகற்ற வல்ல பெருமாளாகி வராஹப் பெருமாள் இப்போதும் பூமி எங்கும் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை அகற்றி பூமியை காத்து அருளட்டும் !
- தியாக.மயூரகிரி சர்மா