free website hit counter

மீனம் : தமிழ் புத்தாண்டுப் பலன்கள்

ஜோதிடம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பராபவ தமிழ்புத்தாண்டில் மீன இராசிக்கான பலன்கள் இங்கே தரப்பட்டுள்ளன.  4தமிழ்மீடியா வாசகர்களுக்காக, பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast) விரிவாகக் கணித்துத் தந்துள்ள இப்பலன்கள்  கோசார ரீதியான பொதுப் பலன்கள்.

உங்கள் தசாபுத்திகளின அடிப்படையிலும், கிரகநிலைகளின்படியும், இப் பொதுப் பலன்களில் மாற்றம் காணப்படலாம் என்பதனையும் வாசகர்கள் கருத்திற் கொள்ளவும். உங்கள் தனிப்பட்ட ஜாதகரீதியான தனித்துவமான பலன்களை கீழே தரப்பட்டுள்ள ஜோதிடரின் தொடர்பு விபரங்களின்  வழி. தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

மீனம்: (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

கிரகநிலை: ராசியில் செவ்வாய், புதன், சனி - தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில் சூர்யன், சுக்கிரன் - சுக ஸ்தானத்தில் குரு - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - அயன சயன போக  ஸ்தானத்தில் சந்திரன், ராகு  என கிரகங்கள் வலம் வருகிறார்கள்.

கிரகமாற்றங்கள்

27-06-2026 அன்று குரு பகவான் சுக ஸ்தானத்தில்  இருந்து பஞசம  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
20-10-2026 அன்று குரு பகவான் பஞ்சம  ஸ்தானத்தில்  இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
13-02-2027 அன்று குரு பகவான் வக்ரம் அடைந்து பஞ்சம  ஸ்தானத்தில்  இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
13-11-2026 அன்று ராகு பகவான் அயன சயன போக  ஸ்தானத்தில்  இருந்து லாப  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
13-11-2026 அன்று கேது பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில்  இருந்து பஞசம  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
கடும்சொற்களால் உங்களை காயப்படுத்துபவர்களைக் கூட அரவனைக்கும் மீன ராசி அன்பர்களே எப்பேர்ப்பட்ட சூழ்நிலையிலும் உங்கள் பொறுப்புகளை  நீங்கள் தட்டிக் கழிக்க மாட்டீர்கள். முடிந்தவரை அனைவருக்கும் நன்மைகள் செய்வதற்கு பாடுபடுவீர்கள். 

உங்கள் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிக் கொடி நாட்டுவீர்கள்.  எதிர்பார்த்த புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். பிள்ளைகளின் வளர்ச்சியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உங்களின் அறிவாற்றலால் அனைத்து விஷயங்களிலும் முத்திரை பதிப்பீர்கள். குடும்பத்தில் குதூகலம் நிறையும். இல்லத்தில் திருமணம், புத்திர பாக்கியம் ஆகிய சுப நிகழ்ச்சிகள் நடக்கும். குல தெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள். குடும்பத்தாருடன் ஆன்மிக சுற்றுலா சென்று வருவீர்கள். உங்களின் பெயரும், புகழும் உயரும். உங்களின் செயலாற்றும் திறமையால் உங்களைச் சுற்றியுள்ளவர்களை கவர்வீர்கள்.

வம்பு, வழக்குகளில் எதிர்பார்த்த திருப்பங்கள் ஏற்பட்டு வருமானம் வரத் தொடங்கும். பல வழிகளிலும் வருமானத்தைக் காண்பீர்கள். ஸ்பெகுலேஷன் துறைகளின் மூலம் சில அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும். உங்களின் காரியங்கள் அனைத்தும் தடங்கலின்றி நிறைவேறும்.

சமுதாயத்தில் பெரியோர்களின் நட்பும், ஆசியும் உங்களுக்கு உந்து சக்தியாக அமையும். உங்கள் காரியங்கள் அனைத்திலும் அதிக விழிப்புடன் நடந்துகொள்வீர்கள். எதிரிகள் உங்களைக் கண்டு அஞ்சுவார்கள். வெளிநாடு செல்ல விசா எதிர்பார்த்திருந்தவர்களுக்கு இந்த ஆண்டு விசா கிடைத்து குடும்பத்துடன் வெளிநாட்டில் குடியேறுவார்கள்.

புதிய வாகனம், ஆடை அணிகலன்கள் சேரும். மூத்த சகோதர சகோதரர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்வீர்கள். அனாவசிய செலவுகள் ஏற்படாது. சேமிப்பு இரட்டிப்பாகும்.

சிறப்பான ஜோதிடக் கணிப்பில்  தினசரி பலன்களை எங்கள் 'உலா' செயலியில் தினமும் காணலாம்.

உலா செயலி இணைப்பு

வாழ்க்கையில் முன்னேற தக்க தருணங்கள் வரும். அவற்றை விட்டுவிடாமல் பிடித்துக்கொள்வீர்கள்.  பூர்வீகச் சொத்துக்களால் லாபம் அடைவீர்கள். தனித்து இயங்கிய நீங்கள் மற்றவர்களால் சூழப்பட்டு மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள்.

உத்யோகஸ்தர்களின் கோரிக்கைகளை மேலதிகாரிகள் உடனுக்குடன் பரிசீலிப்பார்கள். அலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலை நிலவும். சக ஊழியர்களும் நட்பு பாராட்டுவார்கள்.  பணவரவிற்கு சிறு தடைகள் ஏற்பட்டாலும் உழைப்புக்கேற்ற ஊதியத்தைப் பெறுவதில் எந்தத் தடையும் இருக்காது. விரும்பிய இடமாற்றங்களையும் பெறுவீர்கள். உங்களின் வேலைத் திறன் பளிச்சிடும்.

வியாபாரிகளின் திட்டங்கள் நல்ல லாபத்தைக் கொடுக்கும். கொடுக்கல், வாங்கலில் சிறப்புகள் உண்டாகும். விற்பனைப் பிரதிநிதிகளைப் பல இடங்களுக்கும் அனுப்பி உங்களின் பொருட்களை விற்பனை செய்ய முற்படுவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கினாலும் கூட்டாளிகளைக் கலந்தாலோசித்த பிறகே முடிவு செய்யுங்கள்.

விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருந்தாலும் கொள்முதல் விற்பனை சீராக இருக்காது. சிலருக்கு பழைய கடன்கள் வசூலாகும். குத்தகை பாக்கிகளை திருப்பிச் செலுத்துவீர்கள். போட்டிகளையும், வயல், வரப்பு சண்டைகளையும் சந்திக்க நேரிடும்.

அரசியல்வாதிகள் தொண்டர்களின் ஆதரவுடன் செயற்கரிய செயல்களைச் செய்வீர்கள். எதிர்கட்சியினரால் கஷ்டங்கள் ஏற்படாது என்றாலும் கவனமாக இருக்கவும். கட்சித் தலைமையிடம் நற்பெயரைக் காப்பாற்றிக் கொள்ளவும். சச்சரவுகளில் வாயைக் கொடுத்து மாட்டிக்கொள்ள வேண்டாம்.

கலைத்துறையினருக்கு எதிர்பாராத வகையில் வெற்றிகள் கிடைக்கும். உங்கள் வேலைகளைக் குறித்த நேரத்திற்குள் முடித்துவிடுவீர்கள். உங்கள் திறமைகள் மக்களைக் கவரும் விதத்தில் அமையும். மற்றபடி வெளிவட்டாரங்களில் கவனமாகப் பழகவும். சக கலைஞர்களிடம் வீண் வாக்குவாதங்கள் வேண்டாம்.

பெண்மணிகள் கணவரிடம் விட்டுக்கொடுத்து நடந்துகொள்ளவும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். எவரிடமும் மனம் திறந்து பேச வேண்டாம்.

மாணவமணிகள் அதிகம் உழைத்துப் படிப்பதன் மூலம் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். சிலருக்கு வெளியூர் சென்று கல்வி பயிலும் வாய்ப்பு கிடைக்கும்.

     

- காலை நேர உளவளப் பயிற்சிகள் - 

பூரட்டாதி - 4: சகோதரத்தின் வெளிநாடு பயணம் இனிதே நடைபெறும். சுயசார்பும் தன்னிறைவும் பெறுவீர்கள். தைரியம் பளிச்சிடும். 

உத்திரட்டாதி: புதிய வழக்குகளை சந்திக்க நேரிடலாம். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனை நீங்கும். உடலில் சிறு சிறு உபாதைகள் ஏற்பட்டு மறையும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். 

ரேவதி: குடும்பத்தில் சிறு சிறு சிக்கல்கள் வந்து வந்து போகும். சிறைத்துறையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். பயணம் தொடர்பான தொழில்களில் லாபம் கிடைக்கும். கலைத்துறையினருக்கு நன்மைகள் நடக்கும்.

பரிகாரம் : வியாழன்தோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று நவகிரகங்களை வலம் வந்து வணங்கி வரவும். தினமும் முன்னோர்களை  வணங்கவும். காக்கைக்கு அன்னமிடவும். ஏழை எளியோர்க்கு உதவவும்.

சொல்ல வேண்டிய மந்திரம்: தினசரி கோளறு பதிகம் பாராயணம் செய்யவும். 

மலர் பரிகாரம்: வியாழகிழமைதோறும் உங்களால் முடிந்த அளவு அருகம்புல்லை மாலையாகக் கட்டி விணாயகருக்கு சாத்தவும். முடிந்தவர்கள்  தேங்காய் மாலை சாத்தலாம். 

அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: புதன், வியாழன், வெள்ளி; தேய்பிறை: புதன், வியாழன்

ஒவ்வொரு இராசிகளுக்குமான விரிவான பலன்களை, உரிய இராசிகளுக்கு மேல் அழுத்திக் காண்க:

 

- 4தமிழ்மீடியாவுக்காக: பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast

உங்கள் ஜாதகத்தினடிப்படையிலான பிரத்தியேக பலன்களை கட்டண சேவை மூலம் அறிந்து கொள்ளலாம்.  ஜோதிடருன் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.  தொலைபேசி எண் : +91 78451 19542

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: