ஐப்பசி மாத மீன இராசிக்கான பலன்கள் இங்கே தரப்பட்டுள்ளன. இங்கு தரப்படும் பலன்கள் கோசார ரீதியான பொதுப் மேபலன்கள் என்பதனையும், உங்கள் தசாபுத்திகளின் அடிப்படையிலும், கிரகநிலைகளின்படியும், இப் பொதுப் பலன்களில் மாற்றம் காணப்படலாம் என்பதனையும் வாசகர்கள் கருத்திற் கொள்ளவும்.
மீனம்: (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
கிரகநிலை: பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - களத்திர ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன் - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், புதன் - அயன சயன போக ஸ்தானத்தில் சனி (வ), ராஹூ என கிரக நிலைகள் உள்ளன.
கிரகமாற்றம்: 18.10.2025 அன்று சூரியன் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
கிடைத்தது எதையும் சாமர்த்தியமாக தக்க வைத்துக்கொள்வதில் திறமையுடைய மீன ராசியினரே நீங்கள் நட்பிற்கு முக்கியத்துவம் அளிப்பவர்கள். இந்த மாதம் அனைத்து கிரக சஞ்சாரமும் உங்களுக்கு சாதகம் தரும் வகையில் இருக்கிறது. பொருள் சேர்க்கை உண்டாகும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். செவ்வாய் சஞ்சாரம் இட மாற்றத்தை ஏற்படுத்தும். எடுத்த காரியம் தாமதப்படுகிறதே என்ற கவலை உண்டாகும். இரவில் நீண்ட நேரம் கண் விழிக்க வேண்டி வரலாம் கவனம் தேவை.
தொழில் வியாபாரம் எதிர்பார்த்ததை விட குறைவான லாபம் தரும். ஆனால் தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் எப்போதும் பிசியாக காணப்படுவார்கள். செலவுகள் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். கடன் விவகாரங்களில் கொடுக்கல் வாங்கலிலும் எச்சரிக்கை தேவை. பொறுப்புகள் கூடும்.
குடும்பத்தில் இருப்பவர்களால் இருந்து வந்த மன வருத்தம் நீங்கும். வாழ்க்கை துணையின் உடல் நிலையில் நீடித்து வந்த ஆரோக்கிய குறைபாடு பூர்த்தியாகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதன் மூலம் செலவு கூடும். விருந்தினர் வருகை இருக்கும்.
பெண்களுக்கு பயணங்கள் செல்ல நேரிடலாம். எடுத்த வேலையை செய்து முடிக்க காலதாமதமாகலாம். வழக்கத்தை விட கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.
கலைத்துறையினருக்கு வெளிநாடு வாய்ப்புகள் தேடி வரும். நண்பர்களால் இருந்து வந்த தொல்லைகள் தானாக விலகும். கண்கள் உபத்திரவம் ஏற்படாமல் இருக்க கவனம் தேவை.
அரசியல் துறையினருக்கு உங்கள் கடமைகளைச் சரிவர செய்தால் நன்மைகள் அதிகமாக கிடைக்கும். அறிவாற்றலும் செயல்திறமையும் கூடும். உழைப்பு வீண் போகாது.
மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கூடுதல் நேரம் பாடங்களை படிப்பது நல்லது. பொறுப்புகள் அதிகரிக்கும்.
பூரட்டாதி:
இந்த மாதம் பல விதத்திலும் புகழ் கூடும். மற்றவர்கள் பிரச்சனைகளில் வாதாடி வெற்றி பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகும். பழைய பாக்கிகள் வசூலாகும். வியாபாரம் விரிவாக்கம் செய்ய தேவையான பண உதவியும் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிலுவையில் இருந்த பணம் வந்து சேரும். மேல் அதிகாரிகள் உதவி கிடைக்கும். சக ஊழியர் மத்தியில் இருந்து எதிர்ப்புகள் விலகும்.
உத்திரட்டாதி:
இந்த மாதம் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்கள் வருகை இருக்கும். திருமணம் போன்ற சுப காரியம் நடக்கும். நிலம், வீடு மூலம் லாபம் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். சுவையான உணவு கிடைக்கும். மனோ பலம் கூடும்.
ரேவதி:
இந்த மாதம் புதிய நபர்கள் அறிமுகமும் அவர்களால் உதவியும் கிடைக்கும். எதிலும் எச்சரிக்கை தேவை. பயணம் செல்ல வேண்டி இருக்கும். வீண் அலைச்சல் உண்டாகும். எதிர்பார்த்த காரியம் வெற்றிகரமாக நடந்து முடியும். பணவரத்து இருக்கும். எதிர்பார்த்த உதவியும் கிடைக்கும்.
பரிகாரம்: குலதெய்வத்தை வணங்கி வர மனகவலை நீங்கும். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.
சந்திராஷ்டம தினங்கள்: அக் 21, 22, 23
அதிர்ஷ்ட தினங்கள்: நவ 11, 12
ஒவ்வொரு இராசிகளுக்குமான விரிவான மார்ச் மாதப் பலன்களை உரிய ராசிகளுக்கான படங்களின் மேல் அழுத்தித் தெரிந்து கொள்ளலாம்.
- 4தமிழ்மீடியாவுக்காக: பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast
உங்கள் ஜாதகத்தினடிப்படையிலான பிரத்தியேக பலன்களை கட்டண சேவை மூலம் அறிந்து கொள்ளலாம். ஜோதிடருன் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: