உலக பெருங்கடல் தினம் 2021
இன்று ஜூன் 8ஆம் திகதி உலக பெருங்கடல் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
உலக பெருந்தொற்று காலப்பகுதியில் உலகின் பல்வேறு நாடுகள் முடக்கல் நிலையில் இருந்துவருவதால் சுற்றுச்சூழல், கடற்கரை மாசு குறைந்துவருகிறது என்றாலும் தொடர்ந்து கடல்களின் சூழலை பாதுகாப்பது அவசியமாகிறது.
பெருமளவான பிளாஸ்டிக் குப்பைகள் கழிவுகளால் பெருங்கடல்கள் பாதுகாப்பு அன்றதாக உள்ளது, இயலுமான அளவு எமது அன்றாட பிளாஸ்டிக் பாவனையை குறைப்பதன் மூலம் கடல் பாதுகாப்பை உறுதி செய்யலாம். இதன் தொடர்பாக விளக்கும் ஒரு ஒளிப்பதிவு
உலக மூளைக்கட்டி நாள் 2021
NATIONAL DAY OF GRAY
மூளையில் ஏற்படும் கட்டிகள் குறித்த போதுமான விழிப்புணர்வை மக்களிடையே கொண்டு சேர்க்கும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 8 ஆம் தேதி உலக மூளை கட்டி தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த முயற்சி ஆரம்பத்தில் ஜேர்மன் மூளைக் கட்டி சங்கத்தால் எடுக்கப்பட்டது, இப்போது உலகெங்கும் கொண்டாடப்படுகிறது, பொது மக்களிடையே நிலவும் மூளைக் கட்டி பற்றிய நிறைய கட்டுக்கதைகள் மற்றும் தவறான கருத்துக்களை மாற்றவும், மேலும் சில அடிப்படை உண்மைகளை விவாதிக்கவும் இந்த நாள் பயன்படுத்தப்படுகிறது.