ஹாய் : அலுவலக நண்பரிடமிருந்து வாட்ஸ்அப்
எப்படி இருக்கீங்க? : மீண்டும்
இரண்டு சரி அடையாளங்கள் அவருக்கு தெரிந்திருக்கும் நீலமாக!
...
அடுத்த நாள்
இவரிடமிருந்து : ஹாய்!
மீண்டும் : நல்லா இருக்கேன். நீங்க எப்படி?
சிறிது நேரத்திற்கு பின்
நலம் : நண்பரிடமிருந்து
ஏன் இன்னும் வேலைக்கு வரல்ல? : மீண்டும்
நீல நிற சரி அடையாளங்கள்
...
சிறிது நேர சிந்தனைக்குப்பின்
சாதாரண குறுந்தகவல்களுக்குள் ஏற்கனவே வந்திருந்த அலுவலக குறுந்தகவலை காண்கிறான்!
அசாதாரண சூழ்நிலை காரணமாக மறு அறிவித்தல் வரும் வரை உங்கள் பணியை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளோம்"
...
அலுவலக நட்பின் வாட்ஸ்அப் குழு
அவர்களில் ஒருவர் :
ஹாய்
ஒரு வழியா இரண்டு மாசம் கழித்து உங்கள எல்லாம் பார்த்துட்டேன்.
அவர்களில் வேறு ஒருவர் : ஆமா ஒருத்தனத்தான் பார்க்க முடியல
ஆமா ஏன் இன்னும் அவன் வரல்ல..?
எப்ப வறீங்க? பாஸ் : அடுத்தடுத்து அவர்களிடமிருந்து
நீல நிற சரி அடையாளங்கள்
...
அலுவலக குறுந்தகவலை மறுபடியும் பார்க்கிறான்..
நீளமான கோட்டின் அடையாளம் இங்கே இவனது மனதில்..
.
யதார்த்தமாக சொல்லப்பட்ட இக்கற்பனை கதையின் படி இன்று பலரின் பணி நிலைமை இதுதான். இது யார் மனதையும் புண்படுத்துவதற்காக இல்லை.
4தமிழ்மீடியாவிற்காக ஹரிணி