free website hit counter

புரட்சிக் கவி எனப் போற்றப்படும் பாரதியை, சராசரிமனிதனாக, ஒரு தந்தையென பாரதியின் மகளின் பார்வையை, மிக அழகான குறிப்பாக தனது வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கின்றார் லக்ஷ்மி பாலகிருஷ்ணன். அவருக்கான நன்றிகளுடன் அதனை மீள்பதிவு செய்கின்றோம்.- 4TamilmediaTeam

சர்வகட்சி அரசாங்கத்தினை அமைப்பதன் மூலம் எதிர்க்கட்சிகள் அற்ற ஆட்சியை நிலைநிறுத்திவிட முடியும் என்று நம்பிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கனவு எதிர்க்கட்சிகளினால் கலைக்கப்பட்டிருக்கின்றது. நாடு எதிர்கொண்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் அனைத்தையும் உள்ளடக்கிய சர்வகட்சி அரசாங்கத்தினை அமைத்து செயற்பட வேண்டிய அவசியம் இருப்பதாக ரணில் தொடர்ந்தும் கூறிவருகிறார். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ‘ரணில்- ராஜபக்ஷ’ கூட்டிடம் விலை போய்விட்டதாக புகைந்து கொண்டிருந்த சந்தேகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எண்ணைய் ஊற்றியிருக்கிறார். சர்வகட்சி அரசாங்கத்தினை அமைப்பது தொடர்பில் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளை அழைத்து ரணில் சந்தித்து வருகிறார். அதன் ஒரு கட்டமாக கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பை கடந்த வாரம் நிகழ்த்தினார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தில் இருந்து இரா.சம்பந்தன் விலகிக் கொள்ள வேண்டும் என்று கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர் செல்வம் அடைக்கலநாதன் அண்மையில் தெரிவித்திருந்தார். சம்பந்தனின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கின்ற நிலையில், கூட்டமைப்புக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டு அரசியல் செயற்பாடுகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என்கிற கோரிக்கை கடந்த பொதுத் தேர்தல் காலம் முதல் முன்வைக்கப்பட்டு வருகின்றது. 

இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நம்பிக்கைக் கதைகளின் புதிய அத்தியாயமாக இடம்பிடித்திருக்கிறார். ஐந்து தசாப்த கால அரசியல் வாழ்வைக் கொண்டிருக்கின்ற ரணில், ஜனாதிபதிக் கனவை ஒவ்வொரு நாளும் கொண்டு சுமந்தார். இரண்டு தடவைகள் ஜனாதிபதித் தேர்தலில் நேரடியாக போட்டியிட்டு தோல்வியடைந்த போதிலும், அவர் தனது கனவை அடைவதற்கான அனைத்துச் சந்தர்ப்பங்களையும் பரீட்சித்துப் பார்ப்பதற்கு தயாராக இருந்தார். அதுதான், அவரை காலம் இன்று ஜனாதிபதியாக்கியிருக்கிறது. நம்பிக்கைக் கதைகளில் புதிய நாயகனாகவும் மாற்றியிருக்கின்றது. 

விமல் வீரவங்சவையும் உதய கம்மன்பிலவையும் அமைச்சுப் பதவிகளில் இருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ கடந்த வாரம் நீக்கியிருக்கின்றார். விமல், கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார ஆகியோர் அடங்கிய மூவர் அணியின் அமைச்சுப் பதவிகள் பறிக்கப்படும் என்று கடந்த ஆண்டு நடுப்பகுதியிலேயே எதிர்பார்க்கப்பட்டது. 

மற்ற கட்டுரைகள் …