புரட்சிக் கவி எனப் போற்றப்படும் பாரதியை, சராசரிமனிதனாக, ஒரு தந்தையென பாரதியின் மகளின் பார்வையை, மிக அழகான குறிப்பாக தனது வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கின்றார் லக்ஷ்மி பாலகிருஷ்ணன். அவருக்கான நன்றிகளுடன் அதனை மீள்பதிவு செய்கின்றோம்.- 4TamilmediaTeam
பாரதி – அவர் மகளின் பார்வையில்
சமீபத்தில் பாரதி – என் தந்தை என்ற நூல் கண்ணில் பட்டது. இந்நூல் பாரதியின் இரண்டாவது மகளான் சகுந்தலா எழுதியது. வெகுகாலம் முன்னரே படித்த புத்தகம் என்றாலும் அப்போது ஏதும் பதிவிட முடியவில்லை. எனவே இப்போது அந்நூலையொட்டி எழுந்த என் சிந்தனைகளை அவரது பிறந்த நாளான இன்று பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
பாரதியின் இரு புதல்விகளில் மூத்தவரான தங்கம்மா பாரதி, தன் தந்தையோடு அதிக நாட்கள் வசிக்கும் பேறு பெறவில்லை. காசியில் வசித்த அவரது பெரிய தாயார்(செல்லம்மா பாரதியின் சகோதரி) பார்வதியிடமே அவர் அதிக நாட்கள் வளர்ந்தார். அவரை வளர்த்த பெரிய தாயாரின் நிர்பந்தத்தின் பேரில்தான் தங்கம்மாவுக்கு பால்ய விவாகம் நடத்தும் நிலைக்கும் பாரதி ஆளானார் என்பது இந்நூலில் இருந்து தெரிகிறது..
தொடர்ந்து வாசிக்க கீழ்வரும் இங்கு அழுத்துக