தென்னாப்பிரிக்காவில் நடந்த வன்முறைக்கலவரம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டதாக தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசா கூறியுள்ளார்.
தென்னாப்பிரிக்காவில் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமாவை கைது செய்தமைக்கு எதிராக நாடுமுழுவதும் அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். தென் ஆப்பிரிக்காவின் கிழக்கு பிராந்திய பகுதிகளில் ஆயிரக்கணக்காணோர் வீதிகளில் போராட்டம் நடத்திவருவதுடன் அங்குள்ள வணிக வளாகங்கள், உடமைகள் சூறையாடப்பட்டது. இதனால் வன்முறை கலவரமாகா மாறியது. இந்த வன்முறை போராட்டத்தில் இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 212- ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
எனினும் வன்முறையை ஒடுக்க ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதுடன் தற்போது இப்பிரதேசங்கள் இயல்பு நிலைக்கு திரும்பிவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் நாட்டை உலுக்கிய இந்த வன்முறை முன்கூட்டியே திட்டமிடப்பட்டதாகவும் இது ஜனநாயகம் மீதான தாக்குதல் என்றும் தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசா கூறியுள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில் நாட்டின் அமைதியின்மை மற்றும் கொள்ளை சம்பவங்கள் அனைத்தும் திட்டமிட்டு ஒருங்கிணைத்து தூண்டப்பட்டன என்பது மிகவும் தெளிவாக உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.