அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் இஸ்ரேல்-காசா இடையேயான போர்நிறுத்தத்தை கோரி அழைப்பு விடுத்துள்ளார்.
கடந்த எட்டு நாட்களாக காசாவில் இஸ்ரேல் படையினருக்கு பாலஸ்தீனிய போராளிகளுக்கும் இடையே கடுமையான மோதல் நிலவிவருகிறது. பதிலுக்கு பதில் என ராக்கெட் வீச்சு தாக்குதல்களை இரு தரப்பினரும் மாறி மாறி நடாத்தி வருவதால் அந்நாட்டு மக்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். மேலும் இம்மோதலால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 222 ஆக உள்ளதாகவும் இதில் ஹமாஸ் இயக்கத்தை சேர்ந்த 61 குழந்தைகள் உட்பட உயிரிழந்துள்ளனர். எனினும் காசாவில் போராளிகளே கொல்லப்பட்டதாகவும் பொதுமக்கள் எவரும் உயிரிழக்கவில்லை என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே உலக நாடுகள் பலவும் போரை நிறுத்த முயற்சித்தபோதும் அவை தோல்வியில் முடிந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையிலே தற்போது அமெரிக்க அதிபர் ஜோ பிடன் இஸ்ரேல் - பாலஸ்தீனிய போர் நிறுத்தத்திற்கு தனது ஆதரவை தெரிவித்து அழைப்பு விடுத்துள்ளார். மேலும் அவர் அப்பாவி பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிபடுத்த அனைத்து முயற்சிகளையும் எடுக்க இஸ்ரேலை கேட்டுக்கொண்டுள்ளார்.