நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையானது ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்கும் முயற்சியாக இருக்கலாம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், செய்தியாளர்களிடம் பேசிய எம்.பி ராஜபக்ஷ, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கு ஆதரவளிப்பதாக சூசகமாக தெரிவித்தார்.
"நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கப்பட்டமை தொடர்பில் தனக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை எனவும் அவ்வாறான தீர்மானத்திற்கு ஆதரவாக இருப்பதாகவும்" பாராளுமன்ற உறுப்பினர் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
“முன்பு நான் நிறைவேற்று ஜனாதிபதியாக இருந்தேன், இப்போது பதவியை வகித்து முடித்துவிட்டதால் எனக்கு எந்தப் பயனும் இல்லை. ஆனால், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பது நல்லது என்று நான் நம்புகிறேன். தற்போது நாடு இதைத்தான் கேட்கிறது,” என்றார்.
எதிர்காலத்தில் நடைபெறும் எந்தவொரு தேர்தலிலும் தனது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சி வெற்றிபெறும் என்றும் எம்.பி. ராஜபக்ச நம்பிக்கை தெரிவித்தார்.