ஜனாதிபதி வேட்பாளர்களின் பிரசாரங்களுக்கு நிலையான நடைமுறைகளுக்கு அமைவாக கட்டண அடிப்படையில் மட்டுமே விமானங்களை வழங்குவதாக இலங்கை விமானப்படை (SLAF) தெளிவுபடுத்தியுள்ளது.
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது பொது வளங்களை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா (TISL) சமீபத்தில் குறிப்பிடத்தக்க கவலையை தெரிவித்தது. ஜனாதிபதி வேட்பாளர்களால் பிரச்சார நோக்கங்களுக்காக SLAF விமானங்கள் பயன்படுத்தப்பட்டதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.
ஆனால் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் பணம் செலுத்திய பின்னரே பல முன்னணி ஜனாதிபதி வேட்பாளர்கள் SLAF விமானங்களைப் பயன்படுத்தியுள்ளனர் என விமானப்படையின் பேச்சாளர் குரூப் கப்டன் எரந்த கீகனகே தெரிவித்தார்.