2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து அமைக்கப்படும் சஜித் பிரேமதாச அரசாங்கத்தின் கீழ் தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை மீண்டும் ஒருமுறை நடத்தப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தினால் சாதாரண பரீட்சையை நடத்த முடியாவிட்டால் எவ்வாறு நாட்டை ஆள முடியும் என அண்மையில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ஜயசேகர கேள்வி எழுப்பினார்.
"ரணில் விக்கிரமசிங்க தன்னால் எதுவும் செய்ய முடியாது என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். தேர்தல் முடிவடைந்தவுடன், தற்போது நடைபெற்று முடிந்த தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் பெறுபேறுகளை இடைநிறுத்துவது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தலைமையில் கலந்துரையாடல்களை மேற்கொண்டு அதனை மீள நடத்துவோம். புதிய அரசாங்கம் எமது தரம் 05 பாடசாலை மாணவர்களுக்கு நீதி வழங்கும்” என அவர் மேலும் தெரிவித்தார். (நியூஸ்வயர்)