இலங்கையின் 2023 ஆம் ஆண்டிற்கான வரி வருவாய் 3 டிரில்லியன் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நாட்டின் வரலாற்றில் முதல் முறையாகும்.
நிதி இராஜாங்க அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட வரவுசெலவுத் திட்டத்திற்குப் பிந்தைய விசேட அமர்வில் உரையாற்றிய குமாரதுங்க மேலும், வருடத்திற்கு இன்னும் 30 வேலை நாட்கள் எஞ்சியுள்ள நிலையில், வரி வருவாய் ரூ. 3,000 பில்லியனை எட்டும் என கூறியுள்ளார். இது இலங்கையின் சாதனையாகும்.
இன்றுவரை அரசாங்கத்திற்கு சிறந்த வருவாயை ஈட்டித் தருவது உள்நாட்டு இறைவரித் திணைக்களம் எனக் கூறிய அவர், இதன் மூலம் ரூ. 1,415 பில்லியன் ஈட்டியுள்ளது என குறிப்பிட்டார். இது மொத்த வரி வருவாயில் 84 சதவீதமாகும்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) வழிகாட்டுதல்களின் படி உருவாக்கப்பட்ட புதிய வரிக்கொள்கை மற்றும் முறையான அரசாங்க மேற்பார்வை போன்றவை இந்த இலக்கை அடைவதற்கான முக்கிய பங்காகும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.