2024ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு இன்று 45 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி (SLPP) 2024 வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தது. எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகய (SJB) மற்றும் தேசிய மக்கள் சக்தி (NPP) ஆகியவை அதற்கு எதிராக வாக்களித்த அரசியல் கட்சிகளில் அடங்கும்.
2024ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம், நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நவம்பர் 13ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.