அதிக உணவுப் பணவீக்கம் உள்ள நாடுகளில் இலங்கைக்கு கிடைத்துள்ள இடம் - உலக வங்கி இலங்கை Previous Article கொழும்பில் முக்கியமான பகுதிகளை உயர் பாதுகாப்பு வலயமாக அறிவிப்பு - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிறப்பித்துள்ள உத்தரவு Next Article சிறுவர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் அடுத்த வாரம் கூடும் Typography Smaller Small Medium Big Bigger Default Helvetica Segoe Georgia Times Reading Mode Share This உலகில் உணவுப் பணவீக்கம் அதிகம் உள்ள நாடுகளில் இலங்கைக்கு கிடைத்துள்ள இடம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. செப்டெம்பர் 2021 முதல் ஆகஸ்ட் 2022 வரை, 53 நாடுகளில் உணவுப் பாதுகாப்பு குறித்த புதிய அறிக்கையை உலக வங்கி வெளியிட்டுள்ளது. இதன்படி, உலகில் உணவுப் பணவீக்கம் அதிகம் உள்ள 10 நாடுகளில் இலங்கை நான்காவது இடத்தில் உள்ளது. இலங்கையில் உணவுப் பணவீக்கம் 91 சதவீதமாக உள்ளது. உலகிலேயே அதிக உணவுப் பணவீக்கம் உள்ள நாடு ஜிம்பாப்வே, இது 353 சதவீதம். லெபனான் மற்றும் வெனிசுலா முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன. இந்தப் பட்டியலில் முதல் 10 இடங்களில் துருக்கி, ஈரான், அர்ஜென்டினா, மால்டோவா, எத்தியோப்பியா, ருவாண்டா ஆகிய நாடுகள் உள்ளன. Previous Article கொழும்பில் முக்கியமான பகுதிகளை உயர் பாதுகாப்பு வலயமாக அறிவிப்பு - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிறப்பித்துள்ள உத்தரவு Next Article சிறுவர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் அடுத்த வாரம் கூடும்