free website hit counter

IMF இரண்டாவது தவணைக்கான எதிர்பார்ப்பு! - CBSL ஆளுநர்

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) இரண்டாவது தவணைக்கான ஒப்புதலை இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் இலங்கை எதிர்பார்க்கிறது என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இன்று அறிவித்தார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கலாநிதி வீரசிங்க, சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தில் இலங்கை நல்ல முன்னேற்றம் அடைந்து வருவதாக தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் முதல் மீளாய்வு முடிந்ததைத் தொடர்ந்து, உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற சர்வதேச நிதி நிறுவனங்களிடமிருந்து வரவு செலவுத் திட்ட ஆதரவு திட்டங்களின் ஊடாகவும் நிதியைப் பெறுவதற்கு இலங்கை எதிர்பார்க்கிறது என அவர் கூறினார்.

அனைத்து உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களிடமிருந்தும் நிதி உறுதிமொழிகளைப் பெறுவதில் மத்திய வங்கி ஆளுநர் நம்பிக்கை வெளியிட்டார்.

"நாங்கள் சரியான திசையில் நகர்கிறோம். விரைவில் ஒரு நல்ல பிரதிபலனை காண்போம்." என்று அவர் மேலும் கூறினார்.
4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: